School Morning Prayer Activities 03.02.26 | பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.02.2026
திருக்குறள்:
2. வான்சிறப்பு
குறள் 11:
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
மு.வ உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்
சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்
கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது
பழமொழி :
There is no substitute for hardwork.
கடின உழைப்பிற்கு மாற்று எதுவும் இல்லை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பணத்தை விட அறிவே உயர்ந்தது
2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.
பொன்மொழி :
இந்த நொடிப் பொழுது போல் விலைமதிப்பற்ற பொருள் வேறெதுவும் இல்லை. சரியாகப் பயன்படுத்துபவரே வெகுமதியானவர் ...
----------இறையன்பு ஐஏஎஸ்
பொது அறிவு :
01.கரீபியன் கடலில் உள்ள மிகப்பெரிய தீவு எது?
கியூபா -Cuba
02.இந்தியாவின் முதல் இரத்த வங்கி எங்கு தொடங்கப்பட்டது?
கொல்கத்தா-மேற்கு வங்காளம்
Kolkatta- west Bengal
English words :
- Adverse - unfavorable. பாதகமான. எதிரான.
- Anticipate -to expect something to happen, hope for something
- ஒன்றை எதிர்பார்த்து நம்பிக்கையோடு இருத்தல்
தமிழ் இலக்கணம்:
என்ன? யாவை? என்ற வினாச் சொற்களை எங்கு உபயோகிக்க வேண்டும்?
வினா கேட்கும் போது செயல் ஒருமையாக இருந்தால் என்ன என்பதை பயன்படுத்த வேண்டும்? செயல் பன்மையாக இருந்தால் யாவை என்பதை பயன்படுத்த வேண்டும்.
எ. கா
காற்று மாசுபாட்டிற்கு *காரணங்கள்* என்ன? இது தவறு
காரணங்கள் என்று பன்மையில் வருவதால்
காற்று மாசுபாட்டிற்கு *காரணங்கள்* யாவை ? என்று வர வேண்டும்
காற்று மாசுபாட்டிற்கு *காரணம்* யாவை? என்று வரக்கூடாது.
காரணம் என்பது ஒருமைச் செயல் எனவே
காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்ன என்று வர வேண்டும்?
அறிவியல் களஞ்சியம் :
குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள இந்த இடம், உலகத்துடனான தொடர்பை துண்டிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி, ஷார்ட்வேவ் மற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞைகள் இங்கு அடைவதில்லை.
பிப்ரவரி 03
யோகான்னசு கூட்டன்பர்கு அவர்களின் நினைவுநாள்
யோகான்னசு கூட்டன்பர்கு (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg;1398 – பிப்ரவரி 3, 1468) ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானியக்) கொல்லர், பொற்கொல்லர், அச்சுப்பதிவாளர் மற்றும் பதிப்பாளர் ஆவார். ஐரோப்பாவில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்தவர். இவருடைய இயங்கும் அச்சு இயந்திரமானது நவீன அச்சுக்கலையில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டது.
ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை அவர்களின் நினைவுநாள்
கிறித்துவக் கம்பர் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை (எச். ஏ. கிருஷ்ணபிள்ளை, ஏப்ரல் 23, 1827 - பெப்ரவரி 3, 1900) என்பவர் ஒரு கிருத்தவ தமிழறிஞர், புலவர், ஆசிரியிர் ஆவார். ஹென்றி ஆல்பிரடு என்ற பெயர்களின் சுருக்கமே எச்.ஏ.ஆகும். தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய இவரது படைப்புகள் போற்றித் திருவருகல், இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம் ஆகியவை.
நீதிக்கதை
எதிர்காலம்
ஒரு நாள் முல்லா தெருவழியே நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை, அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார். அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள். துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.
அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு. வீட்டுக்குள் தாயும், மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர். இங்கே என்ன நடக்கிறது? என்று முல்லா வினவினார். முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன், அடித்து மிரட்டிப் பார்த்தேன், ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் என்றாள் தாய் வேதனையோடு.
குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா? என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை. நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை என்று அடம்பிடித்தான். முல்லா சுற்றும்முற்றும் பார்த்தார். தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது. அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும், மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.
அம்மா, முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே? என்று திகைப்போடு கேட்டான் பையன். பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே, அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா என்றார் முல்லா. இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான். அவன் சென்றபிறகு, முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
இன்றைய செய்திகள 03.02.2026
- பயணங்கள் என்பது புத்தகமில்லா வகுப்பறை - சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு.
- கடந்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத்துறைக்கு ரூ.612 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.
- இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு & உளவு அமைப்பான 'இண்டெலிஜென்ஸ் பீரோ' அமைப்பிற்கு ரூ.6,782.43 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
- ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம்- டிரம்ப்
விளையாட்டுச் செய்திகள்
- இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பிப்.7 முதல் மார்ச் 8-ம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
Today's Headlines
- Chief Minister quote travel is a classroom without books at the center of Tourism Summit. Also Tamilnadu government has allocated Rs. 612 crore for the department of tourism in the last 5 years.
- The central government has allocated Rs. 6,782.43 for the 'Intelligence Bureau' that is India's internal security & spy agency.
- US president Trump said they will launch a military attack on Iran if there is no agreement .
SPORTS NEWS
- The T- 20 World Cup will be held in India and Sri Lanka from February 7 to March 8.

0 Comments