School Morning Prayer Activities 08 11 23

School Morning Prayer Activities 08 11 23 |பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.11.2023

   





திருக்குறள் :


  • பால் :அறத்துப்பால்
  • இயல்:துறவறவியல்
  • அதிகாரம் : வாய்மை


குறள் :293

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம்:

மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

பழமொழி :

  • Put a beggar on horseback
  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்.


இரண்டொழுக்க பண்புகள் :

1)  நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்.
2)  துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

பொன்மொழி :

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்! - சுபாஷ் சந்திரபோஸ்

பொது அறிவு :

1. வாழ்வியல் உரிமை பாதுகாப்புச் சட்டம் -1955
2. 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது - தமிழக அரசு


English words & meanings :

scenic(adj)(சீனிக் )- having beautiful views அழகான இயற்கைக்காட்சி, serene - calm, untroubled.

ஆரோக்ய வாழ்வு :

அகத்தி பூ: அகத்தியில் வெள்ளை, சிகப்பு,சாழை என்று மூன்றுவகை உண்டு மூன்றையுமே உண்ணலாம், இவற்றில் சிகப்பு அகத்தியின் பூக்கள்தான் சுவையானது.சுவை மட்டுமல்ல அகத்திபூ மருத்துவ குணம் மிக்கது.

நவம்பர் 08  வீரமாமுனிவர் அவர்களின் பிறந்தநாள்


வீரமாமுனிவர் (ஆங்கிலம்: Constanzo Beschi, நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1747)[1] என்று அழைக்கப்படும் கான்சுடான்சோ பெசுக்கி என்பவர் இத்தாலிய நாட்டு கிறித்தவ மத போதகர் ஆவார். இவர் இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களை 370 நூற்பாக்களில் எடுத்துரைத்தார்
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம்.

நீதிக்கதை


 தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக்  கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பில் சுவாரஸ்யமாக  சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.

வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி விலை கோப்பையென சில உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்

"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்.

"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் பொறுப்பு, அந்தஸ்து நமக்குள்ள பொறுப்பு, ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."

"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அறியாமல் போய்விடுகிறோம்.

"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவை அனுபவியுங்கள்.

இன்றைய செய்திகள்  -08.11.2023


  • சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் முதல் கட்டமாக 70.87 % வாக்குகள் பதிவானது.
  • சூரியனில் இருந்து வெளிவரும் x கதிர்களை படம் எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம்.
  • கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 10% போனஸ்- தமிழக அரசு அறிவிப்பு.
  • தீபாவளி பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகள் சென்னை மாநகர காவல் துறை அறிவிப்பு.
  • விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விடிய விடிய மழை நீர்நிலைகள் நிரம்பின.
  • உலக தரவரிசை இந்திய மகளிர் ஹாக்கி அணி 6வது இடத்திற்கு முன்னேறியது.


Today's Headlines


  • 70.87% votes were recorded in the first phase of Chhattisgarh assembly elections.
  • The Aditya L1 spacecraft took pictures of x-rays from the Sun.
  • 10% Bonus for Co-operative Society Employees- Tamil Nadu Govt Notification.
  • Chennai Metropolitan Police Department announces 19 restrictions on bursting Diwali crackers.
  • Dawn rains in Virudunagar, Ramanathapuram and Sivagangai districts filled water bodies.
  • Indian women's hockey team moved up to the 6th position in the world rankings.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

Post a Comment

0 Comments