9TH TAMIL NOTES OF LESSON -SEPTEMBER 2 ND WEEK
9 .ஆம் வகுப்பு தமிழ்-பாடக்குறிப்பு
நாள் : 12-09-2022 முதல் 16-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.கல்வியில் சிறந்த பெண்கள்
2.குடும்ப விளக்கு
1.கற்றல் நோக்கங்கள்
- நாட்டுப்புறக் கலைகள் (நிகழ்கலைகள்)குறித்து அறிதல்.
- பெண் கல்வியின் அவசியம், பெண் சாதனையாளர்கள் குறித்து அறிதல்.
- பெண்கள் சமுதாயத்திலும் குடும்பத்திலும் முக்கிய பங்கு வகிப்பதை உணர்தல்.
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
- ஊர்த் திருவிழாக்களில் நடைபெறும் நிகழ்வுகள் யாவை?
- உனக்கு பிடித்த பெண்மணி யார்? ஏன்?
- பாவேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
- வில்லுப்பாட்டு.
- கல்வியில் சிறந்த பெண்மணிகள்.
- பெண் கல்வி அவசியம் குறித்த குடும்ப விளக்கு கவிதை
5.ஆசிரியர் செயல்பாடு :
- வில்லுப்பாட்டு நிகழ்வு குறித்துக் கூறுதல்.
- காணொளியைக் காட்டுதல்
- பெண் சாதனையாளர்களின் நிழற்படங்களைக் காட்டி அவர்களைப் பற்றிய குறிப்பு தருதல்.
- பாரதிதாசன் கவிதையின் பொருளைச் சுவை குன்றாமல் கூறுதல்.
- கடினச் சொற்களுக்குப் பொருள் தருதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
- வில்லுப்பாட்டு நிகழ்வினை நிகழ்த்திக் காட்டுதல்.
- மாணவிகள் ஒவ்வொரு நிழற்படத்தை ஏந்தி தன் வரலாறு கூறுதல்.
- குடும்ப விளக்கு பாடல் கருத்துகளைக் கொண்டு குறிப்பு எடுத்தல்.
8.வலுவூட்டல்:
- விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் _______________
2.குடும்ப விளக்கு ____________பகுதிகளைக் கொண்டது
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1. பெண் சாதனையாளர்கள் பெயர்களை கூறுக.
2. பாவேந்தரின் படைப்புகள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1. பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்பதை விளக்குக.
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
- பெண்ணின் பெருமை குறித்து உணர்கின்றனர்.
- நாட்டுப்புறக் கலைகளைக்(நிகழ்கலைகள்) காக்க வேண்டிய அவசியம் அறிகின்றனர்.
- பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு பெறுகின்றனர்.
0 Comments