9TH TAMIL NOTES OF LESSON- SEPTEMBER 1ST WEEK
9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 05-09-2022 முதல் 09-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.உயிர்வகை
2.விண்ணையும் சாடுவோம்
3.வல்லினம் மிகா இடங்கள்
1.கற்றல் நோக்கங்கள் :
- தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு ஒப்பிடல்
- அறிவியல் செய்திகளையும்,கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்
- நேர்காணலின் நோக்கமறிந்து ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்தல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
- தற்கால விண்வெளி தகவல்கள் குறித்து கலந்துரையாடி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
- புலனம் ,முகநூல் முதலியவற்றில் வெளியான விண்வெளித் தகவல்களைப் பற்றி உரையாடி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
- ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிர்வகைகள்
- அப்துல்கலாம்,மயில்சாமி அண்ணாதுரை,வளர்மதி,சிவன் பற்றிய தகவல்களை அறிதல்
- எவ்வெவ்விடங்களில் வல்லினம் மிகாது என்பதை உரிய சான்றுகளுடன் அறிதல்
5.ஆசிரியர் செயல்பாடு :
- ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிர்வகைகளை உரிய சான்றுகளுடன் அறிதல்
- நேர்காணலில் எத்தகைய வினாக்கள் இடம்பெறும் என்பதை விளக்குதல்
- நூல்வெளி பகுதியிலுள்ள தகவல்களை மாணவர்களுக்கு விளக்கிக் கூறுதல்
- எவ்வெவ்விடங்களில் வல்லினம் மிகாது என்பதை உரிய சான்றுகளுடன் விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
- இலக்கியங்களில் பொதிந்துள்ள அறிவியலை அறிதல்
- உயிர்வகைகள் எவையென்பதை பகுத்தறிதல்
- நூல்வெளி செய்திகளை அறிதல்
- அறிவியல் அறிஞர்கள் ஆற்றும் பணிகளைத் தெரிந்து கொள்ளுதல்
- வல்லினம் மிகா இடங்களை அறிந்து பயன்படுத்துதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?
2.ஓரறிவுயிர் எது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.உயிர் வகைகளைப் பட்டியலிடுக?
2.வல்லினம் மிகா இடங்களுக்கு இரு சான்றுகள் தருக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.அறிவியல் அறிஞராவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
- தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு ஒப்பிடல்
- அறிவியல் செய்திகளையும்,கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்
- நேர்காணலின் நோக்கமறிந்து ஏற்றவாறு வினாக்களை வடிவமைத்தல்
0 Comments