8TH TAMIL NOTES OF LESSON -SEPTEMBER 2ND WEEK
8. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :12-09-2022 முதல் 16-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.வேற்றுமை
1.கற்றல் நோக்கங்கள் :
பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதில் வேற்றுமை உருபுகளின் பங்கினை அறிந்து பயன்படுத்துதல்.
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
- பள்ளி செல் ,பள்ளிக்குச் செல் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை? என்ற வினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம்செய்தல்
4.பாடச் சுருக்கம் :
- சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை
- 1 முதல் 8 வரை எட்டு வகையான வேற்றுமைகள் உள்ளன
5.ஆசிரியர் செயல்பாடு :
- இலக்கண வரையறைகளை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக்காட்டுதல்.
- வேற்றுமையின் வகைகளை வேறுபடுத்திக்காட்டுதல்.
- வேற்றுமையின் வகைகளைத் தக்க நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
இலக்கண வரையறைகளை உரிய உச்சரிப்புடன் படித்துக் காட்டுதல்.
வேற்றுமையின் பொருளைப் புரிந்துகொள்ளுதல்
பேச்சு வ்ழக்கில் வேற்றுமைகள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.வேற்றுமை-----வகைப்படும்
2.முதல் வேற்றுமை----என்றும் அழைக்கப்படும்
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.வேற்றுமை என்றால் என்ன?
2.வேற்றுமை உருபுகள் யாவை
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.வேற்றுமைகள் பேச்சு வழக்கில் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன?
10.குறைதீர் கற்றல்:
- மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
- பள்ளி செல் ,பள்ளிக்குச் செல் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை? என்ற வினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம்செய்தல்
0 Comments