8TH TAMIL NOTES OF LESSON- SEPTEMBER 1ST WEEK
8. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :05-09-2022 முதல் 09-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.பல்துறைக்கல்வி
2. ஆன்ற குடிப்பிறத்தல்
1.கற்றல் நோக்கங்கள் :
பல்துறைக்கல்வி பற்றி அறிந்து ,கற்று வாழ்வில் உயர்தல்
வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் வாழ்வியல் விழுமங்களை அறிதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
உங்கள் எதிர்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறீர்கள்? என்றவினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம்செய்தல்
”குடி” என்ற சொல் தரும் பல்வேறு பொருள்கள் யாவை? என்ற வினாவைக் கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
- ஏட்டுக்கல்வி,தாய்மொழி வழிக்கல்வி,தமிழ்வழிக் கல்வி,காப்பியக் கல்வி , இயற்கைக் கல்வி முதலியன பற்றி அறிதல்
- ஆன்ற குடிப்பிறத்தல் என்றால் சிறந்தகுடி உன்னிடமிருந்து பிறக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது இச்சிறுகதை
5.ஆசிரியர் செயல்பாடு :
- உரைநடைப்பகுதியை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக்காட்டுதல்.
- பல்துறைக்கல்வியின் அவசியத்தை நடைமுறைச் சான்றுகளைக் கொண்டு விளக்குதல்
- சிறுகதையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் சுருக்கிக் கூறுதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
- உரைநடைப்பகுதியை உரிய உச்சரிப்புடன் படித்துக் காட்டுதல்.
- பல்துறைக் கல்வி எதிர்கால முன்னேற்றத்திற்கு எந்த அளவிற்கு உதவும்? என்பதைப் புரிந்துகொள்ளுதல்
- பாடக்கருத்தை நடைமுறைச் சான்றுகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளுதல்
- மொழித்திறன்களை நன்கு புரிந்து கொள்ளுதல்
- ஆன்ற குடிப்பிறத்தல் என்றால் சிறந்தகுடி உன்னிடமிருந்து பிறக்க வேண்டும் என்ற கருத்தைப் புரிந்து கொள்ளுதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.திரு.வி.க என்றழைக்கப்படுபவர் யார்?
2.திரு.விக பிறந்த ஊர் யாது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.ஆசிரியரின் சந்தேகத்துக்குக் காரணம் என்ன?
2.திரு.வி.க பற்றிக் குறிப்பெழுதுக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.ஆன்ற குடிப்பிறத்தல் என்ற கதையில் நீங்கள் அறிந்த நீதி யாது?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
பல்துறைக்கல்வி பற்றி அறிந்து ,கற்று வாழ்வில் உயர்தல்
வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் வாழ்வியல் விழுமங்களை அறிதல்
0 Comments