7TH NOTES OF LESSON -SEPTEMBER 1 ST WEEK
7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 05-09-2022 முதல் 09-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
அற இலக்கியங்கள் உணர்த்தும் கருத்துகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
உங்களுக்குப் பிடித்த திருக்குறள் யாது? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
- திருக்குறள்களை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
- ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
- எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
- தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
6.தொகுத்தலும்,வழங்குதலும்:
- பெருநாவலர்,முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப் படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
- திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
- அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளையும் ஒன்பது இயல்களையும் கொண்டது
- திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் பாடும் நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
- திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது
- அழுக்காறாமை
- புறங்கூறாமை
- அருளுடைமை
- வாய்மை
- இறைமாட்சி
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
8.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.திருக்குறளை இயற்றியவர் யார்?
2.திருக்குறள் எவ்வாறு போற்றப்படுகிறது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள் யாவை?
2.திருவள்ளுவர் எவ்வாறெல்லாம் போற்றப்படுகிறார்?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.திருக்குறளின் கருத்துகள் வாழ்வில் எந்த அளவிற்கு அவசியம் என விளக்குக.
9.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி
பாடப்பகுதியில் உள்ள திருக்குறள்களை மனப்பாடம் செய்துவரச் சொல்லுதல்
12.கற்றல் விளைவு
அற இலக்கியங்கள் உணர்த்தும் கருத்துகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்
0 Comments