10TH TAMIL NOTES OF LESSON SEPTEMBER 1ST WEEK

10TH TAMIL NOTES OF LESSON SEPTEMBER 1ST WEEK

10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு



நாள்        : 05-09-2022 முதல் 09-09-2022        
மாதம்    :  செப்டம்பர்   
வாரம்     :   முதல் வாரம்                                               
வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         
பாடத்தலைப்பு     :  1.திருவிளையாடற்புராணம்
                                            2. புதிய நம்பிக்கை
                                            3.வினா விடை,பொருள்கோள்               

1.கற்றல் நோக்கங்கள்   :

  • கல்வி சார்ந்த கருத்துகளைச் செ ய்யுள் வா யிலாக அறியவும், சுவைக்கவும், இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.
  • படித்துப் பொருள் உணர்வ துடன் கருத்துகளைத் தொகுத்து வ ரிசைப்படுத்தி எளிமையாக வழங்கும் திறன்பெறுதல்.
  • பொருள் கொள்ளும் முறையறிந்து செ ய்யுளின் பொருளைப் புரிந்து கொள்ளுதல்.


2..கற்பித்தல் துணைக்கருவிகள்:


வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • திருவிளையாடல் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
  •  கல்வியின் அவசியம் குறித்த பழமொழிகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
  • யாருக்கெல்லாம் கேள்வி கேட்பது பிடிக்கும்? என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.


4.பாடச் சுருக்கம்  :             

  • இடைக்காடனார் குலேச பாண்டியனின் அவையில் பாடலைப் பாடுதல்
  • பாண்டியன் இடைக்காடனாரின் பாடலை அவமதித்தல்
  • இடைக்காடனார் இறைவனிடம் முறையிடல்
  • இறைவன் பாண்டியனின் தவறை உணரச்செய்தல்
  • கல்வி கற்கத்துடிக்கும் கருப்பினப்பெண்ணின் வாழ்க்கையில் கல்வி எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது? என்பதே “ புதிய நம்பிக்கை” என்ற சிறுகதையாகும்.
  • வினா வகைகள் 6,விடை வகைகள் 8 ,பொருள்கோள் வகைகள் 8


5.ஆசிரியர் செயல்பாடு              :

  • ஆசிரியர் குறிப்பை விளக்குதல்
  • நூல்வெளி பகுதியை விளக்குதல்
  • பாடற்கருத்தை நயத்துடன் விளக்குதல்
  • விரிவானப்பகுதியைச் சுருக்கி ,எளிமையாக மாணவர்க்குப் புரியும் வகையில் விளக்குதல்
  • இலக்கணப் பகுதியைத் தகுந்த நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்


6.கருத்துரு வரைபடம்:




7.மாணவர் செயல்பாடு:

  • கற்றவர் பெறும் சிறப்புகளைச் செய்யுளின்வழி அறிதல்.
  • செய்யுட்பகுதியைப் பிழையின்றி  படித்தல்
  • அருஞ்சொற்களின் பொருளறிதல்
  • அன்றாட வாழ்வில் வினா விடைகளைப் பயன்படுத்தும் முறைகளை அறிதல்


8.வலுவூட்டல்:


விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:


எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?
2.வினா-----வகைப்படும்.

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.நேரடி விடைகள் யாவை?
2.ஆற்றுநீர்ப்பொருள்கோள் என்றால் என்ன?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1..நீங்கள் மேரியாக இருந்தால் உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்?

10.குறைதீர் கற்றல்:


மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி


 பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு


  • கல்வி சார்ந்த கருத்துகளைச் செ ய்யுள் வா யிலாக அறியவும், சுவைக்கவும், இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.
  • படித்துப் பொருள் உணர்வ துடன் கருத்துகளைத் தொகுத்து வ ரிசைப்படுத்தி எளிமையாக வழங்கும் திறன்பெறுதல்.
  • பொருள் கொள்ளும் முறையறிந்து செ ய்யுளின் பொருளைப் புரிந்து கொள்ளுதல்.

Post a Comment

0 Comments