9TH TAMIL NOTES OF LESSON AUGUST 5TH WEEK
9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 29-08-2022 முதல் 02-09-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.இயந்திரங்களும்,இணையவழிப் பயன்பாடும்
2.ஓ என் சமகாலத் தோழர்களே!
1.கற்றல் நோக்கங்கள் :
- மின்னணு இயந்திரங்களின் தேவையையும்,இணையதளச் சேவையின் இன்றியமையாமையையும் அறிதல்
- அறிவியல் செய்திகளையும் கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
- தற்கால விண்வெளி தகவல்கள் குறித்து கலந்துரையாடி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
- புலனம் ,முகநூல் முதலியவற்றைப்பற்றி உரையாடி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
- ஒளிப்படி இயந்திரம்
- தொலைநகல் இயந்திரம்
- தானியங்கிப் பண இயந்திரம்.
- அட்டை தேய்ப்பி இயந்திரம்
- திறனட்டைக் கருவி
- கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்திலுள்ள மெட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர் . இந்திய அரசின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான பத்ம பூஷண் விருதினைப் பெற்றவர் . கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் .
5.ஆசிரியர் செயல்பாடு :
- இயந்திரங்களின் பயன்பாட்டை விளக்குதல்.
- இயந்திரங்களின் அவசியத்தை விளக்குதல்
- பல்வேறு மின்சாதனங்களைப் பற்றி விளக்குதல்
- நூல்குறிப்பை விளக்குதல்
- மனப்படலை இசையுடன் படித்துக் காட்டுதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
- இயந்திரங்களின் பயன்பாட்டை அறிதல்.
- இயந்திரங்களின் அவசியத்தை புரிந்துகொள்ளுதல் பல்வேறு மின்சாதனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்
- நூல்குறிப்பை அறிதல்
- மனப்படலை இசையுடன் பாடுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
2.வைரமுத்துவின் ஊர் எது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.ஆளறி சோதனைக்கருவி எதற்குப் பயன்படுகிறது?
2.இணையத்தின் அவசியத்தை விளக்குக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.இணைய வணிகம் குறித்த உங்கள் கருத்துகளைப் பதிவு செய்க
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
- மின்னணு இயந்திரங்களின் தேவையையும்,இணையதளச் சேவையின் இன்றியமையாமையையும் அறிதல்
- அறிவியல் செய்திகளையும் கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்
0 Comments