9TH TAMIL LESSON PLAN AUGUST WEEK-2

9TH TAMIL LESSON PLAN  AUGUST WEEK-2


DATE :08.08.22 TO 12.08.22

தலைப்பு :

ஏறு தழுவுதல்


நோக்கம் :

இளைஞர்களின் வீரத்தைப் பெருமைப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வான ஏறு தழுவுதல் பற்றி அறிதல்.

கற்றல் திறன்கள் :

வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செல்வத்திற்கும் அடையாளமாய்த் திகழ்பவை மாடுகள்- ஏறுதழுவுதல் தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு என்பதை அறிதல்.

ஊக்கமூட்டுதல் :

“உங்கள் ஊரில் என்னென்ன விழாக்கள் நடைபெறுகின்றன எனக் கேட்டல்.

பாட அறிமுகம் :

விழாக்கள் ஒற்றுமை யுணர்வை விளக்கும் பண்பாட்டு “அடையாளம் என்பதைப் பாடத்தின் வழி விளக்குதல்.

தொகுத்தல் :

இலக்கியங்களில் ஏறு தழுவுதல் கலித்தொகையின் முல்லைக்கலி சிலப்பதிகாரம், பள்ளு இலக்கியம், புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இலக்கியங்களில் ஏறுதழுவுதல் பற்றிய பதிவை விளக்குதல் – தொன்மை சான்றுகள் – நடுகல் -பாறை ஓவியங்களில் வெளிப்படும் செய்திகள் பண்பாட்டு அடையாளம், – தமிழரின் அறவுணர்வு – இயற்கை வேளாண்மையைப் போற்றுவது நம் கடமை என விவரித்தல், பண்பாட்டுக் கூறுகளைக் காப்பது நம் பெருமை என்பதை உணர்த்துதல்,

மனவரைபடம்  :

விளக்குதல் :

வெளிநாட்டுக் காளைப்போர் குறித்த செய்திகள் – ஏறு தழுவுதல் பற்றிய வேறு பெயர்கள், செய்திகளைத் தொகுத்துரைத்தல்.

மதிப்பீடு  :

  • தமிழரின் வீர விளையாட்டு ————
  • ஏறுதழுவுதல் பற்றித் தொல்லியல் சான்றுகள்  கிடைக்கும் இடங்கள் பற்றிக் கூறுக.

கற்றல் விளைவுகள்  :

  • மொழியில் பொதுந்துள்ள பண்பாட்டு பெருமைகளையும், தொல்லியல் தொன்மைகளையும், படித்துணர்தலுடன் அறம், மறம், கொடை, நேர்மை போன்ற சமூக மதிப்புகளை படைப்புகளில் வெளிப்படுத்ததல்.

தொடர்பணி :

ஊரில் பொங்கல் விழாவில் நடத்தப்படும் போட்டிகள் குறித்து நேரடி, வருணனை செய்க.




Post a Comment

0 Comments