8TH TAMIL NOTES OF LESSON AUGUST 5TH WEEK
8. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 29-08-2022 முதல் 02-09-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.கல்வி அழகே அழகு
2. புத்தியைத் தீட்டு
1.கற்றல் நோக்கங்கள் :
நீதிநூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்
திரையிசைப்பாடல்களில் உள்ள நற்கருத்துகளை அறிந்துகொள்ளுதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
- உங்களுக்குப் பிடித்த அணிகலண்கள் என்னென்ன? என்றவினாவைக் கேட்டு, மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம்செய்தல்
- பழைய பாடல்கள் சிலவற்றைப்பாடி,ஆர்வமூட்டி பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
- ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை. அது போலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை
- ஆலங்குடி சோமு திரையிசைப் பாடலாசிரியராகப் புகழ்பெற்றவர்
- கலைமாமணி விருது பெற்றவர்.
5.ஆசிரியர் செயல்பாடு :
- செய்யுளை இசையுடன் படித்துக்காட்டுதல்.
- நூல்வெளி பகுதியைத் தெளிவாக விளக்குதல்
- பாடற்கருத்தை உரிய சான்றுகளுடன் விளக்குதல்
- மொழித்திறன்களைப் பயிற்சி அளித்தல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
- செய்யுளை இசையுடன் பாடுதல்.
- நூல்வெளி பகுதியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல்
- பாடற்கருத்தை நடைமுறைச் சான்றுகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளுதல்
- மொழித்திறன்களை நன்கு புரிந்து கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.குமரகுருபரர் வாழ்ந்த காலம் யாது?
2.தடம் என்ற சொல்லின் பொருள் யாது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.மாணிக்கக் கோயில் என்று சோமு கூறக்காரணம் யாது?
2.குமரகுருபரர் குறிப்பு வரைக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.ஏன் கல்வியே சிறந்த அணிகலன் என்று கருதுகிறீர்கள்?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
நீதிநூல்களைப் படித்து அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்
திரையிசைப்பாடல்களில் உள்ள நற்கருத்துகளை அறிந்துகொள்ளுதல்
0 Comments