7TH TAMIL NOTES OF LESSON AUGUST 5TH WEEK

 7TH TAMIL NOTES OF LESSON AUGUST 5TH WEEK


    7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு




நாள்        : 29-08-2022 முதல் 02-09-2022      
மாதம்     :  ஆகஸ்டு          
வாரம்     :  நான்காம் வாரம்                                               
வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          


 பாடம்    :           தமிழ்                                                         
பாடத்தலைப்பு     :   1.வழக்கு
                                             2. போலி

1.கற்றல் நோக்கங்கள்   :

  • சொற்கள் மற்றும் தொடர்களில் பயின்று வரும் வழக்கு மற்றும் போலி சொற்களை அறிந்து பயன்படுத்துதல்


2..கற்பித்தல் துணைக்கருவிகள்:


  •          வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்



3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  ”வாழைப்பழம்” என்ற சொல் பல்வேறு வட்டார வழக்குகளில் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப்  பகுதியைப்  படித்தல்.
  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.


5.மனவரைபடம்  :




6.தொகுத்தலும்,வழங்குதலும்:


  • எழுத்திலும்,பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும்
  • வழக்கு இயல்பு வழக்கு,தகுதி வழக்கு என இரு வகைப்படும்.
  • ஓர் எழுத்துக்குப் பதிலாக மற்றோர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.
  • போலி முதல்,இடை,கடை என மூவகைப்படும்.


7.வலுவூட்டல்:
 
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :


1.வழக்கு எத்தனை வகைப்படும்?
2.போலி எத்தனை வகைப்படும்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.வழக்கு என்றால் என்ன?
2.போலி என்றால் என்ன?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.வழக்குச் சொற்கள் சிலவற்றைக் கூறி,அவை எவ்வகையைச் சார்ந்தவை என விளக்கம் தருக

9.குறைதீர் கற்றல்:

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

வழக்குச்சொற்களைத் தொகுத்துவரச் செய்தல்

12.கற்றல் விளைவு

சொற்கள் மற்றும் தொடர்களில் பயின்று வரும் வழக்கு மற்றும் போலி சொற்களை அறிந்து பயன்படுத்துதல்

Post a Comment

0 Comments