6TH STD TAMIL NOTES OF LESSON -AUGUST 5 TH WEEK
6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 29-08-2022 முதல் 02-09-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.ஒளி பிறந்தது
1.கற்றல் நோக்கங்கள் :
- வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறுதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
- வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
- யாருக்கெல்லாம் அறிவியல் அறிஞர் ஆகவேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து, பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
- விரிவானப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
- ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
- எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
- தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
6.தொகுத்தலும்,வழங்குதலும்:
- அப்துல்கலாம் ஐயாவுடன் நடைபெற்ற உரையாடலின் சுருக்கமே நமது பாடப்பகுதி
- அப்துல் கலாம் இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆவார்
- இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அழைக்கப் படுகிறார்.
- அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள்
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
8.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.ஏவுகணை நாயகன் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.கலாம் அவர்கள் ஏவுகணை நாயகன் என அழைக்கப்படக் காரணம் யாது?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.நீங்கள் கலாம் அவர்களைப்போல அறிவியல் அறிஞராக வர என்ன செய்ய வேண்டும்?
9.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி
கலாம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்துவரச் செய்தல்
12.கற்றல் விளைவு:
- வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறுதல்
0 Comments