6TH TAMIL NOTES OF LESSON AUGUST 4 TH WEEK
6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 01-08-2022 முதல் 05-08-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.அறிவியலால் ஆள்வோம்
2.கணியனின் நண்பன்
1.கற்றல் நோக்கங்கள் :
நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தேவை என அறிதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
யாருக்கெல்லாம் அறிவியல் அறிஞர் ஆகவேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து, பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
- செய்யுள்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
- ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
- எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
- தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
6.தொகுத்தலும்,வழங்குதலும்:
- ஆய்வுகளின் அடிப்படையில் யாவற்றையும் நம்புவதே அறிவியல்
- மனிதன் ஆழ்கடலுக்குச் சென்று ஆய்வுகள் செய்கிறான்.
- எந்திர மனிதன் உலகையே நமது உள்ளங்கையில் தருகிறான்
- செக் நாட்டு நாடக ஆசிரியர் காரல் கபெக் ரோபோ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்
- மனிதனின் உழைப்பின்றி தானாகச் செயல்படுபவையே தானியங்கிகள்
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
8.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.ரோபோ என்ற சொல்லின் தமிழாக்கம் என்ன?
2.எந்திர மனிதன் என்பதை ஆங்கிலத்தில் கூறுக
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.நுண்ணுணர்வுக் கருவிகள் என்றால் என்ன?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.தானியங்கிகள் கண்டுபிடிக்கப்படக் காரணம் யாது?
9.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி
எந்திர மனிதனின் புகைப்படங்களைத் தொகுத்து வருதல்
12.கற்றல் விளைவு:
நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தேவை என அறிதல்
0 Comments