6TH TAMIL LESSON PLAN FOR AUGUST WEEK-2
DATE :08.08.22 TO 12.08.22
தலைப்பு :
அறிவியல் ஆத்திசூடி
அறிவியலால் ஆள்வோம்
பாடத்தின் தன்மை :
- தமிழில் உள்ள அறிவியல்நெறியினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
- அறிவியலின் பெருமையினை மட்டும் விளக்குவதால், தனித்தவகையைச் சார்ந்தது.
கற்கும் முறை :
ஆசிரியர் பாடலைப் பாட அதனைக் கேட்டு மாணவர்கள், தானே கற்றல்.
துணைக் கருவிகள் :
- மின்னட்டை
- விளக்கப்படம்
- ஒலிபெருக்கி
- பொருத்தட்டை
- காட்சிப்படம்
- மாதிரி உருவங்கள்
பாட அறிமுகம் :
- ஆத்திசூடி குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
- அறிவியல் குறித்து நீவிர் அறிந்த செய்தியைக் கூறுக? என்ற வினாவினை மாணாக்கர்களிடம் கேட்டு, அவ்விடைகளின் வழியே பாட அறிமுகம் செய்தல்.
வாசித்தல் :
- நூல்வெளிப் பகுதியினை ஆசிரியர் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
- பாடலின் பொருளை உரிய ஒலிப்புடன் வாசித்துக் காட்ட மாணாக்கர்கள் தனித் தனியே வாசித்தல் மேற்கொள்ளுதல்.
கற்றல் திறன்கள் :
- புதிய சொற்களை அடிக்கோடிடல்
- அகராதி கொண்டு பொருள் அறிந்து எழுதுதல்
- சந்த நயத்தோடு வாசித்தல்
தொகுத்தல் : அறிவியல் ஆத்திசூடி
அறிவியல் சிந்தனை, ஆராய்ச்சி, முடிந்தவரை புரிதல், விருப்பத்துடன் அணுகுதல், உண்மையை அறி, ஊக்கமே வெற்றி. அறிவியலே வெல்லும், ஏன் என்று கேள், ஐயம் களைந்து சொல், ஒற்றுமையோடு செயல்படு, ஓய்வின்றி உழை, மருந்தாகும் அனுபவம்.
தொகுத்தல் : அறிவியலால் ஆள்வோம்
- ஆழ்கடல் ஆய்வுகள், நிலவில் வாழ நினைத்தல்
- செயற்கைக்கோளால் செய்தித் தொடர்பில் சிறத்தல், இயற்கைவளம், புயல்,மழை கண்டறிதல்
- எந்திர மனிதன் படைப்பு, இணையத்ததல் உலகம் உள்ளங்கையில், பாதிக்கப்பட்ட உறுப்பை மாற்றி உயிர் காத்தல்.
- அணு பிளந்து தேவைகளை நிறைவேற்றல். நாளைய மனிதன் விண்ணில் நகரம் மற்றும் பாதை
வழங்குதல் :
மனவரைபடக் கருத்துகளை குழுவினில் வழங்கி, ஒட்டு மொத்த தொகுத்தல் செய்தல்.
வலுவூட்டல் :
- மடிக்கணினி அல்லது தொலைக்காட்சி மூலம் பாடல் காட்சிகளைக் காட்டி, பாடத்தை வலுவூட்டுதல்.
- அறிவியல் தொடர்பான பாடல்களை ஒலிபெருக்கி கொண்டு பாடத்தை வலுவூட்டுதல்.
மதிப்பீடு :
மாணாக்கர் திறன் அறிய எளிமையான சில வினாக்கள் கேட்டல்.
வினாக்கள் :
- எப்படிப்பட்ட சிந்தனை கொள்ள வேண்டும்?
- எதனைக் கண்டறிய வேண்டும்?
- எது வெற்றி தரும்?
- எதில் ஆய்வுகள் நடக்கின்றன?
- எதில் வாழ நினைக்கிறான் மனிதன்?
- செயற்கைக்கோளால் எதனைக் கண்டறிய முடிகின்றது?
குறைதீர் கற்பித்தல் :
- மெல்ல அரும்பும் மாணாக்கர்களுக்கு பாடலையும் பொருளினையும் கற்பித்துத் தனியே பயிற்சி அளித்தல்.
எழுதுதல் :
- சொல்வதை எழுதுதல்,
- பாடநூல் மதிப்பீட்டு வினாக்கள் எழுதுதல்.
கற்றல் விளைவுகள் :
- அறிவியல் ஆத்திசூடி பாடல் வழி அறநெறிக் கருத்துகளை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- அறிவியலின் சிறப்புகளைப் பாடல் வழி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்பணி :
- ஔவை மற்றும் பாரதியின் ஆத்திசூடிகளை எழுத வரச் சொல்லல்.
- அறிவியல் ஆத்திசூடியைச் சந்த நயத்துடன் பாடுதல்.
- ஆத்திசூடி ஒன்றைச் சொந்தமாக எழுதி வரச் சொல்லல்.
- அறிவியலால் ஏற்படும் நன்மைகளை எழுதி வரச் சொல்லுதல்.
- அறிவியல் தொடர்பான பிற கவிதைகள் எழுதி வருதல்.
0 Comments