10TH TAMIL NOTES OF LESSON AUGUST 5TH WEEK
10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 29-08-2022 முதல் 02-09-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : ஐந்தாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.மொழிபெயர்ப்புக் கல்வி
2. நீதிவெண்பா
1.கற்றல் நோக்கங்கள் :
மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையையும் நுட்பத்தையும் உணர்ந்து மொழிபெயர்ப்புப் பகுதிகளைப் ப டித்தல், புதிய பகுதிகளைத் தேவைக்கே ற்ப மொழிபெயர்த்தல்.
கல்வி சார்ந்த கருத்துகளைச் செ ய்யுள் வாயிலாக அறியவும், சுவைக்கவும், இன்றையகல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
RAIL என்ற ஆங்கிலச்சொல்லின் தமிழாக்கம் என்ன? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
- மொழிபெயர்ப்பு-தொடக்கம்
- மொழிபெயர்ப்பு-தேவை
- மொழிபெயப்புக் கல்வி
- மொழிபெயர்ப்பு செம்மை
- பல்துறை வளர்ச்சி
- அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி,அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம்சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே அதைப் போற்றிக் கற்க வேண்டும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
- மொழிபெயர்ப்பின் அவசியம்,மொழிபெயர்ப்பின் பயன்கள் முதலானவற்றைத் தக்க நடைமுறைச் சான்றுகளுடன் விளக்குதல்
- மொழிபெயர்ப்பு உலக வரலாற்றில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைச் சுவைபட விளக்குதல்
- கல்வியின் இன்றியமையாமையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவுற விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
- மொழிபெயர்ப்பின் தேவைகளை ஆய்ந்தறிதல்.
- உரைநடைப்பகுதியை பிழையின்றி படித்தல்
- அருஞ்சொற்களின் பொருளறிதல்
- நூல்வெளியிலுள்ள செய்திகளை அறிந்து கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.CAMEL என்ற சொல்லின் பொருள் யாது?
2.நீதிவெண்பாவை இயற்றியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.மொழிபெயர்ப்பு ஏன் அவசியமாகிறது?
2.சதாவதானம் என்றால் என்ன?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1..தவறான மொழிபெயர்ப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
கல்வி சார்ந்த கருத்துகளைச் செ ய்யுள் வாயிலாக அறியவும், சுவைக்கவும்,
இன்றையகல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்.
0 Comments