9TH TAMIL NOTES OF LESSON AUGUST 1 WEEK

 9TH TAMIL NOTES OF LESSON  AUGUST 1 WEEK


9ஆம் வகுப்பு தமிழ்- பாடக்குறிப்பு

நாள்        : 01-08-2022 முதல் 05-08-2022        
மாதம்       :    ஆகஸ்டு          
வாரம்     :   முதல் வாரம்                                               
வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          
பாடம்    :           தமிழ்                                                         
பாடத்தலைப்பு     :  1.ஏறுதழுவுதல் (உரைநடை உலகம்)

1.கற்றல் நோக்கங்கள்   :

  • தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை உணர்தல்.
  • தமிழரின் வீர பாரம்பரியத்தைப் பறைசாற்றுதல்.
  • உயிர் இறக்கம் மிக்க தமிழர் விழாக்களை அறிதல்.


2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

பண்பாட்டுத் தொன்மை மிக்க தமிழர் வரலாறு, பல்வேறு விழாக்களைத் தொன்று தொட்டு நடத்தி வருகிறது. இவற்றுள் 'ஏறு தழுவுதல்' எனும் பண்பாட்டு நிகழ்வும் ஒன்று. என்று கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

  • இலக்கியச் சான்றுகள்
  • தொல் சான்று
  • பண்பாட்டு அடையாளம்
  • தமிழர் அறம்
  • நம் கடமை


5.ஆசிரியர் செயல்பாடு              :

  • வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
  • தமிழரின் பண்பாட்டு விழா குறித்துக் கூறுதல்.
  • பல்வேறு இலக்கியச் சான்றுகளைப் பட்டியலிடுதல்
  • சங்கத் தமிழரின் ஐவகை நிலவாழ்வை விளக்குதல்.
  •  பத்தி வாரியாகப் படித்துக் கடினச் சொற்களுக்குப் பொருள் கூறுதல்.
  • தமிழரின் அறவுணர்வை விளக்குதல்.


6.கருத்துரு வரைபடம்:


7.மாணவர் செயல்பாடு:


நிறுத்தற்குரிய றிந்து மாணவர்கள் படித்தல்.
 கடினச் சொற்களுக்கு அடிக்கோடிடுதல்.
  எ-கா திமில், நடு கற்கள், புடைப்புச் சிற்பங்கள், சித்திரக்கல், மஞ்சுவிரட்டு, ஸ்பெயின்.

8.வலுவூட்டல்:

 விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.ஏறு எனும் சொல்லின் பொருள் யாது?
2.தமிழர் வாழ்வு________அடிப்படையாகக் கொண்டது.

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.ஏறு தழுவுதல் எனப்படுவது யாது?
2.ஏறு தழுவுதலின் வேறு பெயர்கள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.. நீர் எடுப்பவை நிலம் சாடுபவை- வரி இடம்பெறும் நூல் எது?
2..ஏறு தழுவுதல் குறித்த இலக்கியச் சான்றுகள் யாவை?

10.குறைதீர் கற்றல்:

 மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

      பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  • தமிழரின் பண்பாட்டு உணர்வை அறிந்து அதன் அவசியத்தை உணர்கின்றனர்.
  • பிற உயிர்களிடம் இரக்கம் காட்டி மதிக்க முனைகின்றனர்.
  • சங்கத் தமிழரின் வீர வாழ்வை அறிகின்றனர்.


Post a Comment

0 Comments