9TH TAMIL LESSON PLAN JULY WEEK 4
நாள் : 25-07-2022 முதல் 29-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.தண்ணீர் (விரிவானம்)
2.துணை வினைகள் (இலக்கணம்)
1.கற்றல் நோக்கங்கள்:
- கட்டுரைகள்,கதைகளைப்படித்து சுருக்கியும் விரித்தும் எழுதுதல்
- துணைவினைகளை முறையாகப் பயன்படுத்துதல்
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
- வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற சிற்றூர்கள் நீர்ப்பற்றாக்குறையால் அவதிப்படுவதை நீங்கள் அறிவீர்களா?எனக்கேட்டு மாணவர்களை விடைகூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
- கடுமையான குடிநீர்த்தட்டுப்பாடு
- மக்களின் அவல நிலை
- தொடர்வண்டியில் ஏறி தண்ணீர் பிடித்தல்
- தண்ணீர் பிடிப்பதற்குள் தொடர்வண்டி கிளம்புதல்
- தாயின் தவிப்பு
- தனிவினை,கூட்டு வினை
- முதல் வினை,துணை வினை
5.ஆசிரியர் செயல்பாடு :
- வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
- தண்ணீர் சிறுகதையை மெய்ப்பாடுகளுடன் சுவைபடக் கூறுதல்.
- துணை வினைகளை உரிய சான்றுகளுடன் தெளிவாக விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
- நீரின்மையால் மக்கள் படும் அவலங்களைப் புரிந்து கொள்ளுதல்
- அன்றாடப் பேச்சு வழக்கில் துணைவினைகள் பயன்படும் இடங்களைப்பற்றி அறிந்து கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
- தண்ணீர் சிறுகதையை இயற்றியவர் யார்?
- துணைவினை என்றால் என்ன?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
- கட்டுரைகள்,கதைகளைப்படித்து சுருக்கியும் விரித்தும் எழுதுதல்.
- துணைவினைகளை முறையாகப் பயன்படுத்துதல்.
0 Comments