9TH STD TAMIL LESSON PLAN JULY WEEK 1

 9TH STD TAMIL LESSON PLAN JULY WEEK 1


நாள்        :  04-07-2022 முதல்  09-07-2022                 
மாதம்      :    ஜூலை
வாரம்     :  முதல் வாரம்                                            
வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு         
பாடம்    :    தமிழ்                                                         
பாடத்தலைப்பு     :  1. வளரும் செல்வம்     2.தொடர் இலக்கணம்

கற்றல் விளைவு

  •  தமிழ்ச்சொற்களையும் பிறமொழிச்சொற்களையும் வேறுபடுத்தி அறிதல்.
  •  தொடர்களின் அமைப்பினை அறிந்து பயன்படுத்துதல்.

                                                                                                                                        
கருபொருள்   

  • மொழி வளர்ச்சிக்கான வாயில் சொற்பெருக்கம்
  • இலக்கணத்தொடர் அமைப்பு


உட்பொருள்
   

  • தமிழில் கல்ந்த பிறமொழிச்சொற்களும்,தமிழால் உருவான பிறமொழிச்சொற்களும்
  • தொடர் அமைப்பை அறிதல்
  • தொடர் வகைகளை  அறிதல்


அறிமுகம்    

தமிழில் கலந்த பிறமொழிச்சொற்கள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்
முக்கிய கருத்துகள்

பாடச் சுருக்கம்               

  • பின்ன எண்ணிக்கைகளுக்கான தமிழ்ச்சொற்கள்
  • தொழில்நுட்பக் கலைச்சொற்கள்
  • பேச்சுறுப்புகளின் அதிர்விற்கேற்ப பொருள்மயக்கம் ஏற்படுதல்.
  • கடல்துறை சார்ந்த சொற்கள்
  • கிரேக்கத்தில் உள்ள தமிழ்ச்சொற்கள்.
  • தொடர் வகைகள் மற்றும் தொடர் அமைப்பு



ஆசிரியர் செயல்பாடு             

  • வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
  • பிற மொழியில் உள்ள தமிழ்வழிச்சொற்களை ஒப்பீடு செய்தல்
  • தொடர் வகைகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்
  • தொடரமைப்பை விளக்குதல்
  • தொடர்களை வேறுபடுத்தி அறியும் முறைகளை எளிமையாக விளக்குதல்.


கருத்துரு வரைபடம்




மாணவர் செயல்பாடு:

  • சொற்களஞ்சியமே வளரும் செல்வம் என அறிதல்
  • எண்ணற்ற மொழிகளில் உள்ள சொற்கள் தமிழை அடிப்படையாகக் கொண்டு உருவானவை என அறிதல்
  • தொடர் அமைப்பை அறிதல்
  • தொடர் வகைகளை அறிதல்


வலுவூட்டல்

 விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்

மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு

  • அரைக்காணி என்றால் என்ன?
  • வங்கம் என்பது யாது?
  • பயனிலை என்றால் என்ன?
  • வினாத்தொடர் என்றால் என்ன?


தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

Post a Comment

0 Comments