8TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

 8TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

8ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு


வகுப்பு  
    : 8.ஆம் வகுப்பு
பாடம்        : தமிழ்
தலைப்பு   :  கவிதைப்பேழை (ஓடை, கோணக்காத்துப்பாட்டு)
நாள்           :  ஜூலை இரண்டாம்   வாரம் (11-07-2022 முதல் 15-07-2022 வரை)

அறிமுகம்                               :

மனித வாழ்வு இயற்கையோடு இயையந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப் மாலைப் பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடை யும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை . அவ்வா று மனத்திற்கு இன்ப மூட்டும் கவிதை ஒன்றைக் கற்போம் வாருங்கள்!

      மேற்கண்ட கருத்தைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

பாடச்சுருக்கம்                        :             

ஒலி எழுப்பிக்கொண்டு ஓடும் ஓடையைப் பார்க்கும்போது அனைவருக்கும் தானாகவே மகிழ்ச்சி வந்துவிடுகிறது

  • அனைத்துவகை நிலங்களுக்கும் ஓடை நீரைக்கொண்டு சேர்க்கிறது
  • ஓடை அனைவருக்கும் ஒரே மாதிரியான பயனைத் தரவல்லது.
  • இயற்கை மிகவும் அழகானது; அமைதியானது; மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது. ஆனால் அது சீற்றம் கொண் டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத் தி விடும். தமிழ்நா ழ்நாடு அடிக்கடி புயலால்  தாக்கப்படும் பகுதியாகும். முன்பு ஒருமுறை தமிழ்நாடு புயலால் தாக்குண்டது நா ட்டுப்புறப் பாடல் வடிவில் பாடப்பட்ட  பாடல் ஒன்று நமது பாடப்பகுதியாகும்


ஆசிரியர் செயல்பாடு              :

  • வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.  
  • ஓடையின் பயன்களை நடைமுறைச் சான்றுகளுடன் மாணவர்களுக்கு விளக்குதல்
  • சூரைக்காற்று என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என விளக்குதல்


கருத்துரு வரைபடம்




மாணவர் செயல்பாடு:
  • ஓடை மக்களுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கிறது என்பதை அறிதல்.
  • ஓடைகளை அழியாமல் காக்க வேண்டும் என அறிதல்
  • புயல் தாக்கத்தின்போது மக்கள் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என அறிதல்


வலுவூட்டல்:

         விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

  • ஓடை பாடலின் ஆசிரியர் யார்?
  • வாணிதாசனின் இயற்பெயர் என்ன?
  • கோணக்காத்துப்பாட்டு எந்த பகுதியிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது


தொடர்பணி:

    பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

கற்றல் விளைவு

  1.  பாடலை ஓசை நயத்துடன் படித்துச் சுவைத்தல்
  2. நாட்டுப்புறப்பாடலின் வழி மக்கள் உணர்வுகளை அறிதல்

Post a Comment

0 Comments