8TH STD TAMIL LESSON PLAN JULY WEEK 1
வகுப்பு: 8.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கற்கண்டு (எழுத்துகளின் பிறப்பு)
நாள் : ஜூலை முதல் வாரம்(04-07-2022 முதல் 09-07-2022 வரை)
கற்றல் விளைவு
சொற்களின் பிறப்பு முறைகளை அறிந்து உரிய முறையில் பயன்படுத்துதல்
அறிமுகம்
தொல் பழங்காலத்திலேயே ,எவ்வித அறிவியல் கருவியும் இல்லாத காலத்திலேயே,எழுத்துகள் எந்த உறுப்பில் இருந்து பிறக்கின்றன என்று ஒரு அறிஞர் கண்டறிந்துள்ளார். மேற்கண்ட கருத்தைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
பாடச் சுருக்கம்
- அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன. •
- இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன. •
- உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்தும் வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன
- க், ங் - ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ச், ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தி ன் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
- ட், ண் - ஆகிய இருமெய்களும் நா வின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ஆசிரியர் செயல்பாடு
- வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
- எழுத்துகளின் பிறப்பைப் படிப்படியாக விளக்குதல்
- எழுத்துகள் தோன்றுமிடங்களையும்,பிறக்குமிடங்களையும் எளிதாக விளக்குதல்
மாணவர் செயல்பாடு:
- மாணவர்கள் எழுத்துகளின் பிறப்பு எவ்வாறு நிகழ்கிறது என உணர்தல்.
- இடப்பிறப்பைப் பற்றி அறிதல்
- முயற்சிப் பிறப்பைப் பற்றி அறிதல்
- எழுத்துகள் பிறக்கும் இடங்களை எழுத்துகளைச் சரியாக உச்சரித்துப்பார்த்து அறிதல்.
வலுவூட்டல்:
- விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
- மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
- உந்தி என்பது யாது?
- உ,ஊ எவ்வாறு பிறக்கும்?
- இடை நா இடையண்ணம் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் யாவை?
- ப்,ம் ஆகிய மெய்கள் எவ்வாறு பிறக்கின்றன?
தொடர்பணி:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
0 Comments