7TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

 7TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2


7ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு


வகுப்பு     : 7.ஆம் வகுப்பு
பாடம்        : தமிழ்
தலைப்பு    :  விரிவானம் (காடு,அப்படியே நிற்கட்டும் அந்த மரம்)
நாள்             :   ஜூலை இரண்டாம் வாரம்  (11-07-2022 முதல் 15-07-2022 வரை)

1.அறிமுகம்:

     காட்டில் பயணம் செய்த அனுபவம் யாருக்கேனும் உண்டா? என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

                   செய்யுள் பகுதியை  ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப்  பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.


3.மனவரைபடம்:




4.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • காடு எனும் பாடலை இயற்றியவர் சுரதா ஆவார்.இவரது இயற்பெயர் இராசகோபாலன்.பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் தனதுபெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார்
  •  காடு எனும் பாடற்பகுதியில் காட்டின் நன்மைகள் மற்றும் காட்டில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளின் நிலை ஆகியனவற்றை விளக்கியுள்ளார்
  • மரங்களின் நன்மைகள் ,மற்றும் அவை அழிதலால் மனிதகுலத்திற்கு ஏற்படும் இழப்புகள் உள்ளிட்டவை இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளன

5.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • காடு எனும் பாடலை இயற்றியவர் யார்?
  • சுரதா என்பதன் விரிவாக்கம் என்ன?
  • கொல்லிப்பாவை என்ற இதழை நடத்தியவர் யார்?

6. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
  • கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்

7.எழுதுதல்:   

மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.


8.தொடர்பணி:

காட்டின் நனமைகளை எழுதிவரச்சொல்லுதல்.

 9.கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி
  • கணிப்பொறி
  • பாடப்புத்தகம்
  • கரும்பலகை  


10.கற்றல் விளைவு

  •  காடுகளும்,காட்டுயிரிகளும் நாட்டின் முதுகெலும்பு என்பதைப் புரிந்துகொள்ளுதல்
  •  செய்யுளின் வருணனைகளை படித்துச் சுவைத்தல்

Post a Comment

0 Comments