7 TH STD TAMIL LESSON PLAN- JULY WEEK 1

 7 TH STD TAMIL LESSON PLAN- JULY WEEK 1


வகுப்பு: 7.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு:  விரிவானம் (சொலவடைகள்) ,   கற்கண்டு (குற்றியலுகரம்,குற்றியலிகரம்)
 நாள் :      ஜூலை முதல்  வாரம்  (04-07-2022 முதல் 08-07-2022 வரை

கற்றல் விளைவு

  • சொலவடைகளில் பொதிந்துள்ள சமூக உண்மைகளைக் கண்டறிதல்
  • குற்றியலுகர ,குற்றியலிகரச் சொற்களை அடையாளம் கண்டு பயன்படுத்துதல்


1.அறிமுகம்:

சில வட்டார வழக்குச் சொற்களைக்கூறி என்ற பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

  • உரைநடைப்பகுதியை  ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப்  பகுதியைப்  படித்தல்.
  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.


3.மனவரைபடம்:



4.தொகுத்தலும்,வழங்குதலும்:

  •  சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை
  •  பத்து வகை சார்பெழுத்துகளில் குற்றியலுகரமும்,குற்றியலிகரமும் அடங்கும்.
  • உகரம் தன் மாத்திரையளவில் குறைந்தொலிப்பது குற்றியலுகரம் ஆகும்.இது ஆறு வகைப்படும்.
  • அவை :நெடிற்றொடர்,ஆய்தத் தொடர்,உயிர்த்தொடர்,வன்றொடர், மென்றொடர், ஆய்தத்தொடர்.
  • இகரம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது குற்றியலிகரமாகும்

5.மதிப்பீடு:

 மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  1. சொலவடைகள் என்றால் என்ன?
  2. குற்றியலுகரம் என்பது யாது?
  3. குற்றியலுகர வகைகள் யாவை?

6. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
  • கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்

7.எழுதுதல்:   

மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
 

8.தொடர்பணி:

சொலவடைகள் உரையாடலை வகுப்பறையில் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து நிகழ்த்தச் செய்தல்

 9.கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  1.  படவீழ்த்தி
  2. கணிப்பொறி
  3. பாடப்புத்தகம்
  4. கரும்பலகை 

Post a Comment

0 Comments