6TH TAMIL LESSON PLAN JULY WEEK 4

 6TH TAMIL LESSON PLAN JULY WEEK 4


வகுப்பு     : 6 .ஆம் வகுப்பு
பாடம்      : தமிழ்
தலைப்பு :  முதலெழுத்தும்,சார்பெழுத்தும் (கற்கண்டு)
                       திருக்குறள் (வாழ்வியல் இலக்கியம்)

நாள் :      ஜூலை நான்காம் வாரம் (25-07-2022 முதல் 29-07-2022 வரை)

1.கற்றல் நோக்கங்கள்:

எழுத்து வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
 நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.

2.கற்பித்தல் துணைக்கருவிகள்:

சொல்லட்டைகள், வலையொளிப்பதிவுகள்,விளக்கக் காணொளிகள்

3.அறிமுகம்:

தமிழ் எழுத்து வகைகளைப் பற்றித் தெரியுமா? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்:

  • செய்யுள் மற்றும் இலக்கண வரையறைகளை  ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப்  பகுதியைப்  படித்தல்.
  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.


5.மனவரைபடம்:




6.தொகுத்தலும்,வழங்குதலும்
  • எழுத்து முதலெழுத்து,சார்பெழுத்து என இருவகைப்படும்.
  • முதலெழுத்தைச் சார்ந்து வருபவை முதலெழுத்துகள்
  • ஆய்தம் தனிநிலை என்று அழைக்கப்படும்
  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்படுகிறது.

7.வலுவூட்டல்:

  • விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்


8.மதிப்பீடு:

மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  1. முதலெழுத்து என்றால் என்ன?
  2. சார்பெழுத்து என்றால் என்ன?
  3. உலகப்பொதுமறை எது?


9. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,  கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்


10.எழுதுதல்:   

மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

11.தொடர்பணி:

பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதிவரச் செய்தல்


12.கற்றல் விளைவு:

  • எழுத்து வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
  • நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.

Post a Comment

0 Comments