6TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

 6TH TAMIL LESSON PLAN -JULY WEEK 2

6. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு


வகுப்பு      : 6.ஆம் வகுப்பு
பாடம்       : தமிழ்
தலைப்பு   : கவிதைப்பேழை (சிலப்பதிகாரம்,காணி நிலம்)
நாள்            :  ஜூலை இரண்டாம்  வாரம்  (11-07-2022 முதல் 15-07-2022 வரை)


1.அறிமுகம்:

  • திங்கள் என்ற சொல்லின் பொருள் என்ன?.
  • பாரதியார் யார் தெரியுமா?


மேற்கண்ட வினாக்களைக் கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

                   உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்   படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள்  பகுதியைப்  படித்தல்.தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:


சிலப்பதிகாரம்
 




காணி நிலம்





4.தொகுத்தலும்,வழங்குதலும்:

சிலப்பதிகாரம்

  •  திங்கள் ,கதிரவன்,வான்மழை ஆகியவற்றைப் போற்றுவோம்.
  • சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்
  •  இவர் சேர மரபைச் சேர்ந்தவர்
  • சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்


காணி நிலம்

  • காணி நிலம் என்ற பாடலை இயற்றியவர் பாரதியார்
  • வீடு என்பது எப்படி இருக்கவேண்டுமென பாரதியார் இப்பாடலில் கற்பனை செய்கிறார்
  •  பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியன்.


6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  1. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?
  2. இரட்டைக் காப்பியங்கள் யாவை?
  3. பாரதியாரின் இயற்பெயர் என்ன?


7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து, கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்


8.எழுதுதல்:   

மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

9.தொடர்பணி:

கற்பனை வீடு ஒன்றை ஓவியமாக வரைந்துவரச் செய்தல்

 கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி
  • கணிப்பொறி
  • பாடப்புத்தகம்
  • கரும்பலகை   


கற்றல் விளைவு

  •  இயற்கையின் சிறப்புகளை அறிதல்
  • இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி விவாதித்தல்

Post a Comment

0 Comments