6 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JULY WEEK 1
வகுப்பு: 6.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: விரிவானம் (கனவு பலித்தது) கற்கண்டு (எழுத்து -வகை,தொகை)
நாள் : ஜூலை முதல் வாரம் (04-07-2022 முதல் 08-07-2022 வரை)
1.அறிமுகம்:
தமிழில் எண்ணற்ற அறிவியல் கருத்துகள் நிறைந்துள்ளன. தமிழ் எழுத்துகளின் வகைகள் பற்றி அறிதல் அவசியம்
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
2.படித்தல்:
- உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் படித்துக் காட்டுதல்
- ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப் படித்தல்.
- தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
- எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
- கனவு பலித்தது
- ஐம்பூதங்கள் -தொல்காப்பியம்
- கடல்நீர் ஆவியாதல் -முல்லைப்பாட்டு ,பரிபாடல்,திருக்குறள்,கார்நாற்பது
- புண்,வெண்ணிற ஊசி -பதிற்றுப்பத்து
- தொலைநோக்கி-கலீலியோ-கபிலர்
தமிழ் எழுத்துகளின் வகையும்,தொகையும்
- தமிழ் எழுத்துகள் முதலெழுத்துகள்,சார்பெழுத்துகள் என இரு வகைப்படும்.
- உயிர் 12 ம்,மெய் 18 ம் முதலெழுத்துகள் ஆகும்.
- சார்பெழுத்து 10 வகைப்படும்
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
- ஐம்பூதங்கள் யாவை?
- உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?
- சார்பெழுத்து என்பது யாது?
6. குறைதீர் கற்றல்:
- கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
- படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
- எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
- பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
- கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
7.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
8.தொடர்பணி:
தமிழ் எழுத்துகளை வீட்டுப்பாடமாக எழுதிவரச்செய்தல்.
9.கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
- படவீழ்த்தி
- கணிப்பொறி
- பாடப்புத்தகம்
- கரும்பலகை
0 Comments