10TH STD TAMIL LESSON PLAN JULY WEEK 1
நாள் : 04-07-2022 முதல் 09-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. கேட்கிறதா என்குரல் 2. காற்றே வா
கருபொருள்
வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்
காற்றின் முக்கியத்துவத்தை அறிதல்
உட்பொருள்
- பாரதியார் பற்றி அறிதல்
- காற்றின் சிறப்புகளைப் பற்றி அறிதல்.
அறிமுகம்
கவிதை என்பதன் பொருள் உணர்த்தி பாடத்தை அறிமுகம் செய்தல்
உயிரை உள்ளிருத்தும் காற்று, ஓர் உருவம் கொண்டு
நம்மிடம் பே சினால்…எவ்வாறு இருக்கும் எனக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
கற்றல் மாதிரிகள்
கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை
பாடச் சுருக்கம்
உயிராக நான் ,பலபெயர்களில் நான்,இலக்கியத்தில் நான், நான்கு திசையிலும் நான்,முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் ,தடன் பதிப்பேன் நான் என்னும் தலைப்புகளில் காற்று மனித வாழ்விற்கு எவ்வளவு நலன்களைச் செய்கிறது என விளக்குதல்
காற்றே , வா. மகரந்தத் தூளைச்சுமந்து கொண்டு, மனதை
மயலுறுத்து கின்ற இனிய வாசனை யுடன் வா;
இலைக ளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு காட்டு.
என்று காற்றினை அழைக்கிறார் பாரதியார்
ஆசிரியர் செயல்பாடு
- வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
- காற்றே வா பாடலின் பொருளை உணர வைத்தல்
- இலக்கணக்குறிப்பைப் புரிய வைக்
- கவிதையின் நயங்களை உணர்த்துதல்
- காற்று பல்வேறு வடிவங்களின் எவ்வாறு மனிதர்களுக்குப் பயன்படுகிறது என்பதை விளக்குதல்
- காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்
கருத்து வரைபடம்:
மாணவர் செயல்பாடு
- வசன கவிதையைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
- பாரதியார் பற்றிய குறிப்புகளை அறிதல்
- காற்று எவ்வெவ்வடிவங்களில் மனிதனுக்குப் பயன்படுகிறது என்பதை அறிதல்
- காற்று ஆற்றல் வடிவில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிதல்
- பருவமழை எவ்வாறு உருவாகிறது என அறிதல்.
வலுவூட்டல்
- கவிதையை மீண்டும் வாசித்தல்
- விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
குறைதீர் கற்றல்
- மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.
- மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
- கவிதையில் உள்ள எதுகை,மோனை நயங்களை அறிதல், எடுத்து எழுதுதல்
- முக்கியச்சொற்களை அடிக்கோடிட்டு படித்தல்.
மதிப்பீடு
- வசன கவிதையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- ப்ராண ரஸம் என்பதன் பொருள் யாது?
- கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?
- உலக காற்றுநாள் எப்போது கொண்டாடப் படுகிறது?
- காற்றின் வேறுபெயர்கள் யாவை?
தொடர்பணி:
பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.
கற்றல் விளைவு
காற்றுமாசுபாடு குறித்து விழிப்புணர்வு பெறுதல்.
இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்
0 Comments