10ம்‌ வகுப்பு மற்றும்‌ 11ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வுகள்‌ ரத்து செய்தல் பள்ளிக்‌ கல்வித்‌ துறைஅரசாணை எண்‌. 54 நாள்‌ 09.06.2020




பள்ளிக்கல்வித்‌ (.தே) துறை
அரசாணை எண்‌. 54 நாள்‌ 09.06.2020
திருவள்ளுவர்ஆண்டு 2051
சார்வரி வருடம்வைகாசி 27


பள்ளிக்கல்வி - அரசு தேர்வுகள்இயக்ககம்‌ - 2019-20 ஆம்கல்வியாண்டு - 10ம்வகுப்பு மற்றும்‌ 11ம்வகுப்பு (விடுபட்ட பாடங்கள்‌) பொதுத்தேர்வுகள்ரத்து செய்தல்‌- ஆணை வெளியிடப்படுகிறது.
படிக்கப்பட்டவை:-
1. அரசு கடித (நிலை) எண்‌.45, பள்ளிக்கல்வித்‌ (.தே) துறை, நாள்‌ 12.05.2020.
2. அரசு கடித (நிலை) எண்‌.46, பள்ளிக்கல்வித்‌ (.தே) துறை, நாள்‌ 19.05.2020.
3. மாண்புமிகு முதலமைச்சர்அவர்களின்‌ 09.06.2020 நாளிட்ட அறிக்கை.
ஆணை

மேலே முதலாவதாகப்படிக்கப்பட்ட அரசு கடிதத்தில்‌ 2019-20 ஆம்கல்வியாண்டிற்கு01.06.2020 முதல்‌ 10ம்வகுப்பு மற்றும்‌ 11ம்வகுப்பு (விடுபட்ட பாடங்களுக்கு) பொதுத்தேர்வுநடத்துவதற்கும்‌, 12ம்வகுப்பில்‌ 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுதாதமாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவதற்கும்திருத்திய கால அட்டவணைக்கு ஒப்புதல்அளிக்கப்பட்டு அரசு தேர்வுகள்இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2. தற்போது நிலவி வரும்கோவிட்‌-19 பெரும்தொற்று காரணமாக மேற்படி பொதுத்தேர்வுகள்நடத்துவதை தள்ளி வைக்கக்கோரி பெற்றோர்கள்மற்றும்பொது மக்களிடமிருந்துபெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மற்றும்‌ 11ம்வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களுக்கான ( (1). வேதியியல்‌, கணக்கு பதிவியல்‌, புவியியல்‌(புதிய பாடத்திட்டம்‌) (() வேதியியல்‌, கணக்கு பதிவியல்‌, புவியியல்‌, தொழிற்கல்வி கணக்குபதிவியல்‌ (பழைய பாடத்திட்டம்‌) ) பொதுத்தேர்வுகளையும்‌, 12ம்வகுப்பிற்கு 24.03.2020 அன்றுநடைபெற்ற தேர்வினை எழுதாத மாணவர்களுக்கு நடத்தவிருந்த மறுதேர்வினையும்‌,15.06.2020 முதல்நடத்திட மேலே இரண்டாவதாகப்படிக்கப்பட்ட அரசு கடிதத்தில்ஆணையிடப்பட்டது.
3. இந்நிலையில்‌, சென்னை உயர்நீதி மன்றத்தில்இது சார்ந்து வழக்குகள்தொடரப்பட்டு, மாண்புமிகு உயர்நீதிமன்றம்இந்த தேர்வுகளை தற்போதுகொரோனா தொற்றுஅதிகமாக உள்ள நிலையில்தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும்என்றுகேட்டுக்கொண்டுள்ளது.

. 4, மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட அறிக்கையில்குறிப்பிட்டுள்ளவாறு, இது குறித்துஅரசு விரிவாக ஆய்வு செய்து, தற்போது உள்ள நிலையில்கொரோனா தொற்றுசென்னையிலும்‌, சில மாவட்டங்களிலும்தொடர்ந்து அதிகரித்து வருவதாலும்‌, நோய்தொற்று வல்லுநர்கள்‌, நோய்தொற்று குறுகிய காலத்தில்குறைய வாய்ப்பில்லை என்று கருத்துதெரிவித்துள்ளதாலும்‌, பெற்றோர்களின்கோரிக்கைகளையும்‌, நோய்தொற்றின்தற்போதையபோக்கையும்கருத்தில்கொண்டு, மாணவர்களை நோய்த்தொற்றிலிருந்து காக்கும்பொருட்டுஅரசு பின்வருமாறு ஆணையிடுகிறது.

(i) 2019-20ஆம்கல்வியாண்டில்‌, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மற்றும்‌ 11ம்வகுப்பில்விடுபட்ட பாடங்களான வேதியியல்‌, கணக்கு பதிவியல்‌, புவியியல்‌ (புதியபாடத்திட்டம்‌, வேதியியல்‌, கணக்கு பதிவியல்‌, புவியியல்‌, தொழிற்கல்விகணக்கு பதிவியல்‌ (பழைய பாடத்திட்டம்‌) ஆகியவற்றிற்கானபொதுத்தேர்வுகள்ரத்து செய்யப்படுகிறது.

(i) இந்த தேர்வுகள்ரத்து செய்யப்பட்ட காரணத்தால்‌ 10ம்வகுப்பு மற்றும்‌ 11ம்வகுப்பில்விடுபட்ட பாடங்களில்மாணவர்கள்அனைவரும்தேர்ச்சிபெற்றவர்களாகின்றனர்‌.

(14) மாணவர்களுக்கான மதிப்பெண்மதிப்பீடு அவர்களின்காலாண்டு மற்றும்அரையாண்டு தேர்வுகளில்அந்தந்த மாணவர்கள்பெற்ற மதிப்பெண்களின்அடிப்படையில்‌ 80 சதவிகித மதிப்பெண்களும்‌, மாணவர்களின்வருகைபதிவின்அடிப்படையில்‌ 20 சதவிகித மதிப்பெண்களும்வழங்கப்படும்‌.

(14)12ம்வகுப்பு தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே 24.03.2020 அன்று நடைபெற்றதேர்வினை எழுதாத மாணவர்களுக்காக நடத்தப்படவிருந்த மறுதேர்வுஒத்திவைக்கப்படுகிறது. மேலும்‌, சூழ்நிலைக்கேற்ப 12ம்வகுப்பிற்கானமறுதேர்வுக்கான நாள்பின்னர்அறிவிக்கப்படும்‌.
ஆளுநரின்ஆணைப்படி)
தீரஜ்குமார்
அரசு முதன்மைச்செயலாளர்‌.

Post a Comment

0 Comments