10 th பொதுத் தேர்வுகள் மற்றும் நடத்தப்படாமல்
விடுபட்ட 11 th பொதுத்
தேர்வுகள்
– மாணவர்களின்
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் விடைத்தாட்களை
ஒப்படைக்க
-அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
Instructions to HM - Download Pdf
Top sheet model - Download Pdf
10 th format - - Download Pdf
Hsc 1st year format - - Download Pdf
Hsc 1st year arrear format - Download Pdf
அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை – 600 006.
ந.க.எண்.009823/எப்1 /2020 நாள். 16 .06.2020
பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 - மார்ச் /ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும்நடத்தப்படாமல் விடுபட்ட மேல்நிலை முதலாம் ஆண்டுபொதுத் தேர்வுகள் – இரத்து செய்யப்பட்டது – பள்ளிமாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வுகளின் விடைத்தாட்களை ஒப்படைத்தல் -அறிவுரை வழங்குதல் – சார்பு.
பார்வை : அரசாணை (நிலை) எண்.54, பள்ளிக்கல்வி (அ.தே)துறை, நாள்.09.06.2020.
---
பார்வையில் காணும் அரசாணையில், 2019-2020 ஆம் கல்வியாண்டில் பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களானவேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்) வேதியியல்,கணக்குப்பதிவியல், புவியியல் மற்றும் தொழிற்கல்விகணக்குப்பதிவியல் (பழையபாடத்திட்டம்) ஆகியவற்றிகானதேர்வுகள் இரத்து செய்யப்படுகிறது எனவும்,மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு காலாண்டு மற்றும்அரையாண்டுத்தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்றமதிப்பெண்களின் அடிப்படையில் 80 %மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 %மதிப்பெண்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும்பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கு பதிவுசெய்த மாணவர்களுக்கு காலாண்டு மற்றும்அரையாண்டு தேர்வுகளில் அவர்கள்பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80ரூ மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ளஅனைத்து உயர்நிலை/மேல்நிலை பள்ளித் தலைமையாசிரிர்களுக்கும் பின்வரும்அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதுவதற்கும், பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கும் பதிவு செய்த மாணவர்களது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாட்கள், அசல் மாணவர் முன்னேற்ற அறிக்கைகள் ((Progress report cards) மற்றும் காலாண்டு மற்றும் அரையாண்டுத்v தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2. அதே போன்று அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், தங்கள் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுள் எவரேனும், ஏற்கனவே நடைபெற்ற மார்ச் 2019 மற்றும் ஜூன் 2019 பருவங்களில் +1 தேர்வில் வேதியியல் / புவியியல் / கணக்குப் பதிவியல் பாடங்களில் தேர்ச்சி பெறாமல், அப்பாடங்களுக்கான தேர்வுகளை தற்போது மார்ச் 2020 பருவத்தின்போது எழுதும் மாணவர்களின் (+1 Arrear)) பட்டியலில் இருப்பின், அம்மாணவர்களது 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாட்கள், அசல் மாணவர் முன்னேற்ற அறிக்கைகள் (Progress report cards)) மற்றும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
3. அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும், 17.06.2020 பிற்பகல் முதல் 19.06.2020 வரையிலான காலத்தில் www.dge.tn.gov.in v என்ற இணையதளத்தில் தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password ஐ பயன்படுத்தி, தங்கள் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதுவதற்கும், பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கும் பதிவு செய்த மாணவர்களுக்கும் / மேற்குறிப்பிட்ட +1 Arrear மாணவர்களுக்கும் முகப்புத்தாட்களை (Top Sheet )பாடவாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
4. ஒவ்வொரு பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்பு மாணவரது பதிவிறக்கம் செய்யப்பட்ட முகப்புத்தாளுடன், அம்மாணவரது சம்பந்தப்பட்ட பாட காலாண்டுத் தேர்விற்கான விடைத்தாளையும், அரையாண்டுத் தேர்விற்கான விடைத்தாளையும் வைத்து Stapler கொண்டு Staple செய்ய வேண்டும். (முகப்புத்தாள் + காலாண்டுத் தேர்வு விடைத்தாள் + அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்)
i. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வில் மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கு இரண்டுதாள்களுக்கு தேர்வுகள் நடைபெற்றதால், முகப்புத்தாளுடன் காலாண்டுத் தேர்விற்கான இரு தாள்களுக்கான (முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்) விடைத்தாட்களையும் வைத்து அதன் பின்னர் அரையாண்டுத் தேர்விற்கான விடைத்தாளையும் வைத்து Stapler கொண்டு Staple செய்ய வேண்டும்.
ii. பதினோராம் வகுப்பு மாணவர்களது வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாட முகப்புத் தாளுடன் சம்பந்தப்பட்ட பாட காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான விடைத்தாட்களையும் வைத்து Stapler கொண்டு Staple செய்ய வேண்டும்.
5. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர், ஒவ்வொரு முகப்புத் தாளின் Part A– ல் உள்ள மாணவரது பெயர், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் மற்றும் முகப்புத் தாளுடன் வைத்துத் தைக்கப்பட்டுள்ள மாணவரது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான விடைத்தாட்கள் ஆகியவற்றை சரிபார்த்த பின்பு, முகப்புத் தாளில் Part C பகுதியில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்.
i. காலாண்டு அல்லது அரையாண்டுத் தேர்விற்கு மாணவர்கள் வருகை புரியவில்லையெனில் அதற்குரிய மதிப்பெண் கலத்தில் AAA எனக் குறிப்பிட வேண்டும்.
ii. பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டுத் தேர்வில் மொழிப்பாடம் /ஆங்கிலப் பாடங்களுக்கு இருதாள்களிலும் பெற்ற மதிப்பெண்களையும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு மாற்றம் செய்த பின்பு வரும் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்.
iii. பத்தாம் வகுப்பில் மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கானதாகவும், அறிவியல் பாடத்திற்கான மதிப்பெண்கள் 75 மதிப்பெண்களுக்கானதாகவும் இருக்கவேண்டும்.
4 பதினோராம் வகுப்பில் வேதியியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான மதிப்பெண்கள் 70 மதிப்பெண்களுக்கானதாகவும், கணக்குப் பதிவியல் பாடத்திற்கான மதிப்பெண்கள் 90 மதிப்பெண்களுக்கானதாகவும் இருக்கவேண்டும்.
5. Part -C –ல் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவரது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்விற்கான மதிப்பெண்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்பு உரிய இடத்தில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் கையொப்பமிடவேண்டும்.
6 முகப்புத் தாளின் Part –A ல் உள்ள மாணவரது விவரங்களையும், Part -C பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களையும் சரிபார்த்த பின்பு, பள்ளித் தலைமையாசிரியர் Part -C பகுதியில் உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும்.
6. அதே போன்று, +1 Arrear மாணவர்களது முகப்புத்தாளுடன், சம்பந்தப்பட்ட மாணவரது 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான +1 காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான வேதியியல் / புவியியல் / கணக்குபதிவியல் பாட விடைத்தாளை வைத்து Stapler கொண்டு Staple செய்து, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை பதிவு செய்த பின்பு, Part C பகுதியில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும்.
7. ஒவ்வொரு பத்தாம் வகுப்பு மாணவரது ஒவ்வொரு பாட முகப்புத்தாளுடன் கூடிய விடைத்தாட்களையும் பாடவாரியாக (மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்) அடுக்கி வைத்து, அதன் மேல் சம்பந்தப்பட்ட மாணவரது முன்னேற்ற அறிக்கையினை வைத்து Stapler கொண்டு Staple செய்ய வேண்டும் அல்லது மேல்பகுதியில் ஊசி மூலம் தைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மாணவர்களின் பெயர்பட்டியலில் (NR) உள்ள தேர்வெண் வாரியாக அடுக்கி 25 விடைத்தாள்கள் கொண்ட கட்டுக்களாக கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டுக்களின் மீது, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை (சரிபார்ப்பு படிவம்-1) வைத்து,அப்படிவத்தில் கல்வி மாவட்டம், பள்ளி எண் & பெயர், மாணவரது தேர்வெண் மற்றும் பெயர் ஆகிய விவரங்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
8. பதினோராம் வகுப்பு மாணவர்களது வேதியியல் / புவியியல் / கணக்குபதிவியல் பாட விடைத்தாட்களை பாட வாரியாக பிரித்த பின்பு, ஒவ்வொரு மாணவரது முன்னேற்ற அறிக்கையுடன், முகப்புத்தாளுடன் கூடிய சம்பந்தப்பட்ட பாட விடைத்தாளை வைத்து Stapler கொண்டு Staple செய்ய வேண்டும். அதன் பின் மாணவர்களின் பெயர்பட்டியலில் (NR) உள்ள தேர்வெண் வாரியாக 25 விடைத்தாட்கள் கொண்ட கட்டுக்களாக கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டுக்களின் மீது, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை (சரிபார்ப்பு படிவம்-2) வைத்து, அப்படிவத்தில் கல்வி மாவட்டம், பள்ளி எண் & பெயர், பாடம், மாணவரது தேர்வெண் மற்றும் பெயர் ஆகிய விவரங்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
9. அதே போன்று +1 Arrear மாணவர்களது 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான (+1) மாணவர் முன்னேற்ற அறிக்கையுடன், முகப்புத்தாளுடன் கூடிய 2018-2019 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான வேதியியல் / புவியியல் / கணக்குபதிவியல் பாட விடைத்தாளை வைத்து Stapler கொண்டு Staple செய்ய வேண்டும். அதன் பின் மாணவர்களின் பெயர்பட்டியலில் (NR) உள்ள தேர்வெண் வாரியாக 25 விடைத்தாட்கள் கொண்ட கட்டுக்களாக கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டுக்களின் மீது, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை (சரிபார்ப்பு படிவம்-3) வைத்து, அப்படிவத்தில் கல்வி மாவட்டம், பள்ளி எண் & பெயர், பாடம், மாணவரது தேர்வெண் மற்றும் பெயர்ஆகிய விவரங்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
10. பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்பு மாணவர்களது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகளின் கடைசி பக்கத்தில் வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு ஒப்படைக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
11. அதே போன்று +1 +1 Arrear மாணவர்களது 2018-2019ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மதிப்பெண் பதிவேடுகளின் கடைசி பக்கத்தில் வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு ஒப்படைக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
12. பள்ளித் தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதுவதற்கும் / பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளை எழுதுவதற்கும் / +1 Arrear தேர்வெழுதுவதற்கும் பதிவு செய்த மாணவர்களது கீழ்க்கண்ட ஆவணங்களை, 22.06.2020 முதல் 27.06.2020 வரையிலான நாள்களுக்குள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அறிவிக்கும் பள்ளியில், அவர் குறிப்பிடும் நாளன்று தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.
i. மாணவரது முன்னேற்ற அறிக்கையுடன் வைத்து தைக்கப்பட்ட முகப்புத்தாளுடன் கூடிய காலாண்டு / அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் அடங்கிய கட்டுக்கள்
ii. மாணவர்களது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகள்
13. மேற்குறிப்பிட்ட ஆவணங்களை மாவட்டக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்படும் மையத்தில் ஒப்படைத்ததற்கான ஒப்புதலை பள்ளித் தலைமையாசிரியர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
14. பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்பு மாணவர்களது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள மதிப்பெண் பதிவேடுகளை ஒப்படைக்கும் முன்னர் மதிப்பெண் பதிவேட்டின் பக்கங்களை கட்டாயமாக அச்சுப்பகர்ப்பு நகலெடுத்து பள்ளிகளில் வைத்துக் கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களின் முன்னேற்ற அறிக்கைகளையும் (Progress report cards) அச்சுப்பகர்ப்பு நகலெடுத்து பள்ளிகளில் வைத்துக் கொள்ளவேண்டும்.
15. பள்ளிகள் ஒப்படைக்கும் ஆவணங்களுள், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான விடைத்தாட்கள், மாணவர் முன்னேற்ற அறிக்கைகள், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்ட பதிவேடுகள் ஆகியவற்றுள் எவையேனும் இல்லையெனில், அதற்குரிய விளக்கத்தினை பள்ளித் தலைமையாசிரியர்கள் எழுத்துப் பூர்வமாக மாவட்டக் கல்வி அலுவலரிடம் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால் மந்தணத்தன்மையுடன் செயல்படவேண்டும் என அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இப்பணிகளில் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
இணைப்பு .
1. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள முகப்புத்தாளின் மாதிரி
2. மூன்று சரிபார்ப்பு படிவங்கள்
2 Comments
There are no quarterly and half yearly answers scripts are kept in most of the schools.They have mark statements and rank cards only.What they can do?
ReplyDeleteThere are no quarterly and half yearly answers are kept in most of the schools.They have mark statements and rank cards only.What they can do?
ReplyDelete